Also Watch
Read this
By: Manigandan Raja

திருச்சி திருவானைக்காவல் கன்னிமார் தோப்பு பகுதியில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக 90-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மக்களின் குடியிருப்புகளைக் காலி செய்ய பாலகிருஷ்ணன் என்பவர் தனக்கு பாதை வேண்டி நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கியுள்ளார்.
தனிநபரை கண்டித்துப் பொதுமக்கள் திடீர் என யாத்திரிகா நிவாஸ் செல்லும் வழியில் 100க்கு போடப்பட்டோர் சாலை மறியல் போராட்டனர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்களை நேரில் சந்தித்து மனு
கொடுப்பதற்காகப் பொதுமக்கள் நீண்ட நேரமாகக் காத்திருந்தனர். இந்த நிலையில், மக்கள் காத்திருப்பதை அறிந்தவுடன் காவல்துறையினரின் வழிகாட்டுதலின்படி, அமைச்சரின் பயண வழித்தடம் மாற்றியமைக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டன. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இதனைத் தொடர்ந்து
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பொதுமக்களைச் சமாதானப்படுத்த திருச்சி மாவட்ட பொறுப்பாளரும், அமைச்சர் ரமேஷ் சற்று நேரத்தில் நேரில் வருவார் என உறுதி அளித்தனர்.
அதனை ஏற்றுப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டு, பொதுமக்கள் சாலையோரமாக அமர்ந்தனர். இதற்கிடையே, போராட்டக் களத்திற்கு நேரில் வந்த அமைச்சர் ரமேஷ் பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, பாலகிருஷ்ணன் என்ற ரியல் எஸ்டேட் தொழிலதிபர் இந்த இடங்களைக் காலி செய்யக் கோரி நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளார்.

அந்த உத்தரவை உடனே நடைமுறைப்படுத்தினால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், அதற்கால காலஅவகாசம் கொடுக்கும் வகையில் நிறுத்தி வைக்க அதிகாரிகளிடம் கூறியிருக்கிறேன். இதற்காக அரசு மீது பாலகிருஷ்ணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதற்கு அரசு பதிலளிக்க வேண்டிய நிலை உள்ளதால், சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து பொதுமக்களைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் உறுதியளித்தார். அமைச்சரின் இந்த உறுதிமொழியால் பொதுமக்கள் நிம்மதியடைந்து கலைந்து சென்றனர்.
60 ஆண்டுகளுக்கு மேலாக வாழும் இப்பகுதியில் உள்ள 90க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு மாநகராட்சி சார்பில் சாலை வசதி போடப்பட்டுள்ளது கழிவறை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது அதேபோன்று குடிநீர் வசதி செய்து
கொடுக்கப்பட்டுள்ளது தற்போது இந்த இடத்தை காலி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நாங்கள் அமைச்சரின் பேச்சுவார்த்தையால் பணிந்து சென்றுள்ளோம்.
மீண்டும் எங்கள் இடத்தை காலி செய்ய செய்தால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என போராட்டத்தில் ஈடுபட்ட கன்னிமார் தோப்பு பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved