Also Watch
Read this
By: Fyrose Banu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஹன்சிகா மோத்வானி, தனது 35-வது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அவை தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றன.குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான ஹன்சிகா, பின்னர் கதாநாயகியாக உயர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கினார். குறிப்பாக தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்து பிரபலமானார். சினிமா வாய்ப்புகள் சற்று குறைந்துள்ள நிலையிலும், அவ்வப்போது திரைப்படங்களில் நடித்து வரும் ஹன்சிகா, சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். தனது புகைப்படங்கள், பயணங்கள் மற்றும் தனிப்பட்ட தருணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.
கடந்த 2022-ம் ஆண்டு தொழிலதிபர் சோஹைல் கத்தூரியாவை திருமணம் செய்துகொண்ட ஹன்சிகாவின் திருமண வாழ்க்கை பின்னர் பல்வேறு காரணங்களால் கவனம் பெற்றது. இதனிடையே, இருவரும் கடந்த மார்ச் மாதம் சட்டப்படி விவாகரத்து பெற்றதாக தகவல்கள் வெளியாகின. தற்போது தனது கவனத்தை மீண்டும் திரையுலகில் செலுத்தி வரும் ஹன்சிகா, புதிய பட வாய்ப்புகள் தொடர்பாக கதைகளை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது 35-வது பிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் நெருங்கியவர்களுடன் ஹன்சிகா கொண்டாடியுள்ளார். வண்ணமயமான அலங்காரங்கள், பிறந்தநாள் கேக் என கொண்டாட்ட தருணங்களை வெளிப்படுத்தும் புகைப்படங்களை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
புகைப்படங்களில் ஹன்சிகாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் உற்சாகம் வெளிப்படுவதால், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனால், அவரது பிறந்தநாள் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved