Also Watch
Read this
By: Manigandan Raja

படப்பிடிப்புக்கு மத்தியில் குழந்தையாக மாறிய சீயான்
தொடர் படப்பிடிப்புக்கு மத்தியில் குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நடிகர் விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் குரங்கு என்ன செய்கிறதோ அதுபோன்றே விக்ரமும் செய்து காட்டி மகிழ்ந்தார்.
விக்ரம் தற்போது ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் தனது 63ஆவது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.
காந்தாராவை பார்த்துதான் சில காட்சிகளை படமாக்கினேன்
ரிஷப் ஷெட்டியின் காந்தாரா திரைப்படத்தை பார்த்துதான் கருப்பன் படத்தில் சில காட்சிகளை படமாக்கியதாக இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூறினார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், கருப்பு படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் தனக்கு பிடிக்கும் என்றார்.

படப்பிடிப்பு தளத்தில் தனக்கு வசனம் எழுத வராது என்பதால் படப்பிடிப்புக்கு செல்லும் முன்பே அனைத்து வசனங்களையும் பேப்பரில் தெளிவாக எழுதிக் கொண்டு செல்வேன் என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved