news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

மது போதையில் போலீசாருக்கு ’பிராங்க் கால்,’ வம்பிழுத்து கம்பி எண்ணும் பரிதாபம்

வாண்டடாக வண்டியில் ஏறிய இளைஞர்

8

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மது போதையில் போலீசாருக்கு பிராங்க் கால்

மது போதையில் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு போலி புகார் தெரிவித்த இளைஞர், பின்னர் தலைமை காவலருக்கு போன் செய்து ’உடனடியா வரீங்களா இல்லையா?’ என ஆவேசமாகி ஆபாச வார்த்தைகளால் அர்ச்சித்த நிலையில், பெரிய பிரச்சனை என நம்பிச் சென்ற போலீசாருக்கு ட்விஸ்ட் கொடுத்ததால் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

மது அருந்திவிட்டு...

மது அருந்தினால் அமைதியாக சென்று படுத்து தூங்காமல், போலீசுக்கே போன் போட்டு வம்பிழுத்ததால் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் இந்த இளைஞர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், செல்லம்பட்டி காமராஜ் நகரை சேர்ந்தவர் ரஞ்சித். கூலி வேலைக்கு சென்று வரும் ரஞ்சித் கடந்த சனிக்கிழமையன்று மது அருந்தி விட்டு போதை தலைக்கேறிய நிலையில், பொழுது போகாமல் போலீசாருக்கு போன் போட்டு வாண்டடாக வழக்கு வாங்கி உள்ளார்.

நூறுக்கு போன் போட்டு...
முதலில் அவசர உதவி எண் 100ல் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட ரஞ்சித், நிலத்தகராறு காரணமாக பெரிய பிரச்சனை நடப்பதாக கூறியுள்ளார். பின்னர், நாகரசம்பட்டி காவல் நிலைய தலைமை காவலர் அண்ணாதுரையின் தனிப்பட்ட எண்ணில் தொடர்பு கொண்ட ரஞ்சித், உடனடியாக வருமாறு அழைத்து உள்ளார். தலைமை காவலர் தாம் வெளியில் இருப்பதாகவும், காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறும் கூறவே, டென்ஷனான ரஞ்சித் வாயில் வந்த கெட்ட வார்த்தைகளை எல்லாம் வரைமுறையின்றி கொட்டித் தீர்த்தார்.

ஜாலியாக தூங்குங்க...
இதனிடையே காவல் கட்டுப்பாட்டு அறை தகவலின் பேரில் நாகரசம்பட்டி காவல் நிலைய போலீசார், புகாரில் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று ரஞ்சித்துக்கு போன் செய்த போது, ஏக வசனத்தில், ‘சொல்லுடா’ என்றவர், போலீஸ் பேசுவதாக கூறியதும், எள்ளலும் துள்ளலுமாக, ‘சொல்லுங்க சார்’ என்றதோடு, தான் வீட்டில் தூங்கி கொண்டிருப்பதாக கூலாக தெரிவித்து உள்ளார். மேலும், ‘பிரச்சனை எல்லாம் முடிந்து விட்டது, நீங்களும் வீட்டிற்கு சென்று சரக்கு போட்டு விட்டு ஜம்முன்னு, ஜாலியா தூங்குங்க,’ என்று போலீசாருக்கே அட்வைசும் கொடுத்தார்.

சிறையில் அடைப்பு
இதையடுத்து தலைமை காவலர் அண்ணாதுரை அளித்த புகாரின் பேரில், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, அவதூறாகப் பேசியது உள்ளிட்ட பிரிவுகளில் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்த நாகரசம்பட்டி போலீசார், இரவோடு இரவாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாக்யராஜ் குறித்து நடிகை ஊர்வசி உருக்கம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved