news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் வலியுறுத்தல்

சமாதான பேச்சுவார்த்தை

1

By: Pari karthick

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
முற்றுகை போராட்டம்

கரூர் மாவட்டம்,குளித்தலை ஆற்று பாதுகாப்பு உபகோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை விவசாயிகள் தென்கரை மற்றும் கட்டளை மேட்டு வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தி உதவி செயற்பொறியாளர் வெங்கடேசனை முற்றுகையிட்டு தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி காலை 10 மணி முதல் மன்னனை கேன்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் உதவி செயற்பொறியாளர் போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்,பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து குளித்தலை நீர்வளத் துறை அலுவலகம் முன்பாக திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை இன்ஸ்பெக்டர் திருவானந்தம், டி.எஸ்.பி ராஜேஷ் உட்பட போலீசார் சமாதான பேச்சு வார்த்தை ஈடுபட்டனர்,இது சமந்தமாக திருச்சி சரக நீர்வளதுறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து உடனியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்த பின்னர் சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதில் குளித்தலை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Related Link
சுங்கச்சாவடியில் கட்டணம் கட்ட மறுத்த தவெகவினர்

சுங்கச்சாவடியில் கட்டணம் கட்ட மறுத்த தவெகவினர்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved