Also Watch
Read this
By: Manigandan Raja

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே ஜெயங்கொண்டநிலையில் புதிய கல்குவாரி அமைக்கும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.புதிய கிரசர்,கல்குவாரி மற்றும் ஏற்கனேவே இயங்கி வரும் கல்குவாரிகளை மூட வலியுறுத்தி ஜெயங்கொண்டநிலை,வடவன்பட்டி, மலம்பட்டி உள்ளிட்ட ஐந்து ஊர் கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் வடவன்பட்டி மயில்ராயன்கோட்டை நாட்டுக்கோயில் மந்தையில் 38 கிராம மக்கள் கூடி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நாட்டுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மயில்ராயன்கோட்டை நாடு என்ற மல்லாக்கோட்டை நாட்டை சுற்றி இயங்கி வரும் அனைத்து கிரசர், கல்குவாரிகளை மூட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் கனிமவளத்திற்காக தோண்டக்கூடாத பகுதியாக அறிவிக்க கோரி அரசுக்கு கவனத்தை ஈர்க்கும் விதமாக வடவன்பட்டி கிராமத்தில் ஆகஸ்ட் 19 தேதி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved