Also Watch
Read this
By: Manigandan Raja

திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் முக்கிய சாலைகள் நடுவே அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்கள் மற்றும் மின்விளக்குகளுக்கு செல்லும் மின் கம்பிகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது இதனால்
மின்கம்பங்களிலும் அவ்வப்போது மின்சாரம் பாய்ந்து பொதுமக்களுக்கு ஆபத்தான சூழலை ஏற்படுத்தி வருகிறது நேற்று முன்தினம் பல்லடம் சாலை பகுதியில் சாலையை கடக்க முயன்ற ஒருவர் மின் கம்பத்தை தொட்ட போது அதில் மின்சாரம் பாய்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்த போது மக்கள் அவரை மீட்டு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர் இதனைத் தொடர்ந்து மின்கம்பத்தில் மின்சாரம் பாய்வதாக டெஸ்டர் கருவி மூலம் அப்பகுதியைச் சேர்ந்த நபர் சோதனை செய்து வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக பராமரிப்பு இல்லாத மின்கம்பங்களை கண்டறிந்து மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved