Also Watch
Read this
தவெக அரசின் பட்ஜெட்டில், திராவிட மாடல் அரசின் சாதனைகளே ஜொலிக்கிறது, என முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். பேசி உள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில்...
தமிழக பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, இன்று ஆகஸ்ட் 11ஆம் தேதி திமுக எம்எல்ஏவான ஓ.பன்னீர்செல்வம், பேசியதாவது;
தேடுகிறேன், தேடுகிறேன், தேடிக் கொண்டிருக்கிறேன், மாற்றம் இல்லை தமிழ்நாட்டு மக்களுக்கு ஏமாற்றமே. நல்லதும் மாற்றம் தான், கெட்டதும் மாற்றம் தான். மொத்தத்தில் தமிழ்நாடு பெற்றிருப்பது ஏமாற்றம் தான்.
மு.க.ஸ்டாலினின் திட்டங்கள்

தவெக அரசின் நிதிநிலை அறிக்கையால் மக்கள் ஏமாந்து நிற்கின்றனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது கஜானா காலி என்று தவெக சொன்னதை இந்த நிதிநிலை அறிக்கை கேள்விக்குறியாக்கி உள்ளது. எங்கு பார்த்தாலும் மு.க.ஸ்டாலினின் திட்டங்கள் தான் மக்கள் மனதில் நிற்கிறது.

அரசு தவறி விட்டது
அடிப்படை சம்பளம் உயரும் என்று எதிர்பார்த்த காவலர்கள் ஏமாந்து போய் உள்ளனர். ஆட்சிக்கு வந்த பின்னும் இன்னும் தேர்தல் அறிக்கையிலேயே தூங்கி கொண்டிருக்கிறது தவெக அரசு. நிதி, அதிகார பகிர்வுக்காக திமுக குரல் கொடுத்து வருகிறது. மக்கள் நலனில் மு.க.ஸ்டாலினை மிஞ்சி யாரும் திட்டங்களை செயல்படுத்த முடியாது. தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கான புதிய அடித்தளத்தை அமைக்க இந்த அரசு தவறிவிட்டது.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved