news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

காங். எம்.பி. பிரியங்கா புன்னகையுடன் அளித்த பதில்

பெண், சிறுவனுடன் ஒன்றாக சென்ற ராகுல் காந்தி?

9

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
காங். எம்.பி. பிரியங்கா புன்னகையுடன் அளித்த பதில்

மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக முழக்கமிட்ட பாஜக எம்.பி.யிடம் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி புன்னகையுடன் பதிலளித்தார். அரசுப் பணித் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக ஜார்க்கண்டில் போராடிய மாணவர்களை ஏன் சந்திக்கவில்லை? என ராகுல்காந்திக்கு எதிராக, நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்பிக்கள் கோஷமிட்டனர்.

அப்போது, அந்த வழியாக வந்த பிரியங்கா காந்தி பாஜக எம்பியின் ஆக்ரோஷமான கோஷத்தைக் கேட்டதும், பதற்றமடையாமல் தன் நடையை நிறுத்தினார். முகத்தில் ஒரு மெல்லிய புன்னகையை ஏந்தியபடி, பாஜக எம்பி கையில் வைத்திருந்த பதாகையை உற்று நோக்கினார். பின்னர் அவரிடம் மிகவும் நிதானமாக, "ராகுல் காந்தி ஏற்கெனவே ஜார்க்கண்ட் மாணவர்களை நேரில் சந்தித்துப் பேசிவிட்டார்" என்று சிரித்தபடியே கூறிவிட்டுத் தன் வழியே நகர்ந்தார்.

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பகிர்ந்துள்ள புகைப்படம்
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பெண் மற்றும் சிறுவனுடன் இருப்பதை போன்ற புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், அவர்கள் யார் என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாக தெரிவித்து உள்ளார். திருமணம் செய்து கொள்ளாத ராகுல் காந்தி அடிக்கடி வெளிநாட்டுக்கு செல்வதாக தொடர் விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், இப்புகைப்படம் அரசியல் வட்டாரத்தில் பூதாகரமாகியுள்ளது.

அப்பெண் புர்கா அணிந்துள்ள நிலையில் ராகுல் காந்தியுடன் படகில் சென்றதாக கூறப்படும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து நிலைப்பாட்டை மாற்றும் ராகுல் காந்தி

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved