Also Watch
Read this
By: Fyrose Banu

ஓசியில் சிக்கன் ரைஸ் கேட்டு கடை மற்றும் மாஸ்டரை அடித்து துவம்சம் செய்த இளைஞர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் எர்ரம்பட்டி பகுதியைச் சேர்ந்த கமல்நாதன் (27) என்பவர் காக்கங்கரை பகுதியில் சிக்கன் ரைஸ் கடை நடத்தி வருகிறார்.இந்த நிலையில் சிக்கன் ரைஸ் மாஸ்டராக தெலுங்குமற்ற பள்ளி பகுதியைச் சேர்ந்த நவீன் (22) என்பவர் கடையில் வேலை செய்து வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து கண்ணாலப்பட்டி பகுதியைச் சேர்ந்த மனோஜ் குமார் மகன் தனுஷ் (22) மற்றும் அவரது நண்பர் காக்கங்கரை பகுதியைச் சேர்ந்த கோபி மகன் தினேஷ் (20) உள்ளிட்ட இருவரும் சிக்கன் ரைஸ் வாங்குவதற்காக கடைக்கு சென்று உள்ளனர். மேலும் சிக்கன் ரைஸ் மாஸ்டர் நவீன் ஏற்கனவே 400 ரூபாய் பழைய பேலன்ஸ் கொடுக்க வேண்டும் என தெரிகிறது. இதனால் ஓசியில் சிக்கன் ரைஸ் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர் இதனால் சிக்கன் ரைஸ் தர மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மாஸ்டரை சரமாரியாக கரண்டி மற்றும் கடாயை வைத்து பயங்கரமாக தாக்கியுள்ளனர்.

கடையில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் சிக்கன் ரைஸ் மாஸ்டர் கந்திலி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் தனுஷ் மற்றும் தினேஷ் இருவரையும் சந்திளி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved