news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

தொகுதி மறு சீரமைப்பு எதிராக தீர்மானம், முதல்வர் விஜய் உரை

தமிழ்நாடு சட்டப்பேரவையில்...

11

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு Delimitation நடவடிக்கைக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் ஜோசப் விஜய், அரசினர் தனி தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

தமிழக சட்டசபையில்...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஆகஸ்ட் 12ஆம் தேதி, அரசினர் தனித் தீர்மானத்தைக் கொண்டுவந்து, முதல்வர் விஜய் உரையாற்றினார். மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்யும் மத்திய அரசின் திட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தது.

மகளிர் இட ஒதுக்கீடு
தற்போதைய மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையான 543 என்ற அளவை மாற்றாமல் நிரந்தரமாக அப்படியே இருக்க வேண்டும். மாநிலங்களுக்கு இடையிலான தற்போதைய விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ இட ஒதுக்கீட்டு முறையை எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே தொடர வேண்டும்.

Related Link
காவிரியில் தினமும் 1 டி.எம்.சி நீர் திறக்க உத்தரவு

காவிரியில் தினமும் 1 டி.எம்.சி நீர் திறக்க உத்தரவு


தொகுதி எண்ணிக்கையை உயர்த்தாமல், தற்போதுள்ள 543 தொகுதிகளின் அடிப்படையிலேயே 2029 மக்களவைத் தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து வரும் சட்டமன்றத் தேர்தல்களிலும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்.

தென் மாநிலங்களின் உரிமைகளுக்காக...
1971ஆம் ஆண்டுக்குப் பிறகான மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் நிரந்தரமாகப் பாதிக்கப்படும். தேசிய நலனைக் கருதி மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய முற்போக்கு மாநிலங்களின் அரசியல் குரலை ஒடுக்கும் ஆயுதமாகத் தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடக் கூடாது. தென்மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கவே இந்த தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆலோசனைக்குப் பிறகு...
கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி, தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்பிக்களுடன் முதல்வர் விஜய் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அந்த ஆலோசனையின் தொடர்ச்சியாகவே இந்த தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக ஆதரவா, இல்லையா? அறிவித்தார் உதயநிதி

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved