news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news காவிரியில் தினமும் 1 டி.எம்.சி நீர் திறக்க உத்தரவு
tv

Also Watch

காவிரியில் தினமும் 1 டி.எம்.சி நீர் திறக்க உத்தரவு

காவிரி ஆணையம் அதிரடி

6

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க, காவிரி மேலாண்மை ஆணையம் மீண்டும் உத்தரவிட்டது. அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 1 டி.எம்.சி வீதம் நீர் திறக்க வேண்டுமென கர்நாடக அரசுக்கு கட்டளையிடப்பட்டு உள்ளது.

Related Link
பூஜ்ய கட்டண விதிக்கு முற்றுப்புள்ளியா? இனி UPIல் பணம் அனுப்ப கட்டணமா?

பூஜ்ய கட்டண விதிக்கு முற்றுப்புள்ளியா? இனி UPIல் பணம் அனுப்ப கட்டணமா?

கர்நாடக அரசுக்கு...
டெல்லியில், காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் இன்று ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, தமிழகத்தின் தண்ணீர் தேவையைக் கருத்தில் கொண்டு வினாடிக்கு சுமார் 12 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், ஆணையத்தின் தலைவர் எஸ். கே. ஹல்தார் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. அதில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்று, 15 நாட்களுக்கு நாள்தோறும் ஒரு டி.எம்.சி. நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

தமிழக அரசு கோரிக்கை
கடந்த ஜூன், ஜூலை மாதங்களுக்கு கர்நாடக காவேரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய தண்ணீரினுடைய மொத்த அளவு 88 டிஎம்சி உள்ளது. இதில் சுமார் 12 டிஎம்சி அளவுதான் கர்நாடக காவேரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு இன்று வரை திறந்து விட்டுள்ளது.

மீதம் இருக்கக்கூடிய தண்ணீரை ஆகஸ்ட் மாதத்திற்குள் திறந்துவிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று, தமிழக அரசின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், காவிரியில் தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு சுமார் 12 ஆயிரம் கன அடி வீதம் தொடர்ந்து 15 நாட்களுக்கு திறக்க கர்நாடக அரசிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக எம்எல்ஏக்களை கண்டித்த அமைச்சர் விஸ்வநாதன்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved