news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

சிக்மா" திரைப்படத்தின் 2-வது பாடல் இன்று வெளியீடு

ஜேசன் சஞ்சய்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சிக்மா

"அய்யய்யோ அம்மாடி" என தொடங்கும் பாடல் வெளியீடு 

முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் "சிக்மா" திரைப்படத்தின் 2-வது பாடல் இன்று ((12-ம் தேதி)) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. "அய்யய்யோ அம்மாடி" என தொடங்கும் பாடலை படக்குழு வெளியிடுகிறது.

இந்த படத்தில் சந்தீப் கிஷன், பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்பு தாசன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரியோ ராஜ்   நடித்துள்ள 'ராம் இன் லீலா' திரைப்படம் 

அறிமுக இயக்குநர் ராம்சந்திரன் கண்ணன் இயக்கிய 'ராம் இன் லீலா' படம் வருகிற 21-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் வர்திகா கதாநாயகியாக நடித்துள்ளார்.

காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்திற்கு அங்கித் மேனன் இசையமைத்துள்ளார்.

ஹார்டின் படம் வரும் 14ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது

அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில், கடந்த ஜூன் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ஹார்டின் படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி அமேசான் பிரைம் மற்றும் SimplySouth ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் நாயகனாக சனந்த் நடித்துள்ளார். நாயகிகளாக மடோனா செபாஸ்டியன் மற்றும் திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் இமயா ஆகியோர் நடித்துள்ளார்.

Related Link
வைரலாகும் நடிகை த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவு

வைரலாகும் நடிகை த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசுக்கு அவகாசம் வேண்டும், வேளாண் அமைச்சர் பதிலுரை

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved