Also Watch
Read this
By: Manigandan Raja

பங்கிபூர் தொகுதி எம்எல்ஏ பிரசாந்த் கிஷோர் வாக்குறுதி
பீகார் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், நன்றி தெரிவிக்கும் பயணத்தில் 10 ஆயிரம் பேருக்கு வேலை தருவதாக உறுதி அளித்துள்ளார். பீகாரில் உள்ள எந்தவொரு சட்டமன்ற தொகுதியிலிருந்தும் அதிக எண்ணிக்கையிலான வேலைகளை பெறப்போகிறவர்கள் பாங்கிபூர் பகுதி மக்களாகத்தான் இருப்பார்கள் என்றார்.
பள்ளியில் பாம்பு கடித்து 3 பழங்குடியின சிறுமிகள் உயிரிழப்பு
மகாராஷ்டிராவில் பாம்பு கடித்து 3 பழங்குடியின சிறுமிகள் உயிரிழந்ததை தொடர்ந்து, அரசு உதவி பெறும் உறைவிடப்பள்ளியின் உரிமத்தை மாநில அரசு நிரந்தரமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கட்சிரோலி மாவட்டம் ஜப்தலாலி கிராமத்தில் உள்ள பள்ளியில் கடந்த 9-ம் தேதி இரவு 50 மாணவிகள் தூங்கிக் கொண்டிருந்தபோது 6 பேரை பாம்பு கடித்ததில் 3 சிறுமிகள் உயிரிழந்தனர்.
மின்னல் தாக்கியதில் 24 மணி நேரத்தில் 9 பேர் உயிரிழப்பு
பீகாரில் மின்னல் தாக்கியதில் 24 மணி நேரத்தில் மட்டும் 9 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்கா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் உட்பட 5 பேரும், லக்கிசராய் மாவட்டத்தில் 3 பேரும், பாட்னா மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved