news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை

தண்டனை மற்றும் அபராதம்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
திரௌபதி முர்மு

மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்

வந்தே மாதரம் பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்க வகை செய்யும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி, வந்தே மாதரம் பாடலுக்கு இழைக்கப்படும் எந்தவொரு அவமதிப்புக்கும் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

வரும் 15-ம் தேதி டெல்லி சுதந்திரதின விழாவில், முதல் முறையாக வந்தே மாதரம் பாடல் பாடப்படும்.

அருணாச்சல பிரதேசத்தில் சீன படைகளின் அத்துமீறல் 

அருணாச்சல பிரதேசத்தில் சீன படைகளின் அத்துமீறலுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், எல்லை விவகாரங்களின் நிலை இரு நாடுகளுக்கும் இடையிலான பரந்த இருதரப்பு உறவுகளின் தன்மையை பிரதிபலிக்கும் என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீப் ஜெய்ஸ்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறும் கிராமசபை கூட்டங்கள்

ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில், மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு வரும் காவிரி நீர் பாதிக்கப்பட்டு, காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகும் என்றும், தமிழகத்தின் குடிநீர் ஆதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

Related Link
பயோடேட்டாவை கொடுங்க: 10,000 பேருக்கு வேலை

பயோடேட்டாவை கொடுங்க: 10,000 பேருக்கு வேலை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சொரிமுத்து அய்யனார் கோயிலில் குவிந்த பக்தர்கள்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved