news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்க என இபிஎஸ் வலியுறுத்தல்

"அனைத்துக்கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்"

14

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தவெக அரசு பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை வஞ்சிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

தஞ்சாவூரில் எடப்பாடி பழனிசாமி
தஞ்சாவூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் பேசியதாவது;
வேளாண் சாகுபடி செய்தால் தான் விளைச்சல் கிடைக்கும். விளைச்சல் கிடைத்தால் தான் விவசாயிகள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியும். ஆனால், வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனை
முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பில் ஏற்கனவே அறிக்கை வாயிலாக வலியுறுத்தியுள்ளோம்.

முக்கிய கோரிக்கை
சட்டப்பேரவையில், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் விவசாயிகளின் துயரத்தை உணர்ந்து பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், விவசாயிகளின் முக்கிய கோரிக்கை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது தமிழக வெற்றிக் கழகம் சார்பில்
வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்ற பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்றும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடனில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், என்பதே விவசாயிகளின் இன்றைய போராட்டத்தின் முக்கிய நோக்கம்.

அதிமுக ஆட்சியில்...
இதற்காக, தமிழகம் முழுவதும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2016 சட்டமன்றத் தேர்தலின்போது ஜெயலலிதா, விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதன்படி, அதிமுக ஆட்சியில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

Image

நியாயமானதாக இல்லை
கொரோனா காலத்திலும் விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை முழுமையாக விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டனர். அந்த சூழ்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ரூ.12,110 கோடி அளவிலான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. விவசாயிகளின் கடன் சுமையை நீக்குவதற்காக அதிமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை
மேற்கொண்டது. ஒரு குடும்பத்தில் மூன்று விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் பெற்றிருந்தாலும், மூவருக்கும் கடன் தள்ளுபடி வழங்கப்பட்டது. ஆனால், தற்போதைய நடைமுறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பல விவசாயிகளில் குறைந்த தொகை கடன் பெற்றவர்களுக்கு மட்டுமே தள்ளுபடி கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு நியாயமானதாக இல்லை.

பயிர்க்கடன் தள்ளுபடி
மேலும், 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ரூ.75 ஆயிரம் வரை கடன் தள்ளுபடி, அதற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக கடன் இருந்தாலும் ரூ.35 ஆயிரம் மட்டுமே தள்ளுபடி என்ற நிலை உள்ளது. இதுபோன்ற கட்டுப்பாடுகள் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, தேர்தல் வாக்குறுதியின்படி சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடனில் குறைந்தபட்சம் 50 சதவீதத்தையாவது தள்ளுபடி செய்ய வேண்டும்.

அனைத்துக்கட்சி கூட்டம்
காவிரி விவகாரத்தில் பல ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி, உச்சநீதிமன்றத்தின் மூலம் தமிழகத்துக்கான நீர் உரிமையை அதிமுக அரசு நிலைநாட்டியது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடக அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் தமிழக விவசாயிகள் போராடித்தான் தண்ணீரைப் பெற வேண்டிய நிலை தொடர்கிறது. காவிரி நீர் பிரச்சினையில் தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். டெல்டா மாவட்ட விவசாயிகள், பிரதிநிதிகள், சட்ட வல்லுநர்கள்
உள்ளிட்டோரை அழைத்து ஆலோசனை நடத்தி, தமிழகத்தின் உரிமையை சட்டரீதியாக நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Image

மேகதாது விவகாரம்
கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு முயற்சி செய்து வருகிறது. மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்களின் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும். தமிழகத்தின் பல மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் காவிரி நீர் உள்ளது. எனவே, மேகதாது அணை கட்டும் முயற்சியைத் தடுக்க தமிழக அரசு முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகளை கர்நாடக அரசு முறையாக செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

10 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்

டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் உடனடியாக கிடங்குகளுக்கு மாற்றப்படாமல் பல இடங்களில் தேங்கி கிடக்கின்றன. டெல்டா மாவட்டங்களில் மட்டும் சுமார் 10 லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல்
நிலையங்களில் தேங்கி இருப்பதாக கூறப்படுகிறது. மழையில் நனைந்து நெல் முளைத்து விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாத வகையில், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனடியாக பாதுகாப்பான கிடங்குகளுக்கு மாற்ற வேண்டும்.

ரூ.25 ஆயிரம் நிவாரணம்
வறட்சி, நிலத்தடி நீர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், வறண்டு கிடக்கும் ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் தங்களது நிலங்களுக்கு இயற்கை உரமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும், விளைநிலங்களுக்கும் இயற்கை வளம்
கிடைக்கும்.

‘நடந்தாய் வாழி காவிரி’

காவிரி ஆற்றின் நீர் மாசுபடுவதை தடுக்கும் வகையில் அதிமுக ஆட்சியில் ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டம் உருவாக்கப்பட்டது. காவிரி ஆற்றின் இரு கரைகளிலிருந்தும் கலக்கும் கழிவுநீரை சுத்திகரித்து, கடைமடை வரை தூய்மையான நீர் செல்வதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் நோக்கம். இதற்காக மத்திய அரசிடம் இருந்து ரூ.11,250 கோடி நிதி பெறப்பட்டது, இந்த திட்டத்தை தற்போதைய அரசு முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Related Link
வாக்குறுதி என்ன ஆனது? இபிஎஸ்-க்கு எஸ்.பி.வேலுமணி கேள்வி

வாக்குறுதி என்ன ஆனது? இபிஎஸ்-க்கு எஸ்.பி.வேலுமணி கேள்வி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தலைவர்களை ஆரத்தழுவுவது தான் வெளியுறவு கொள்கையா? என ராகுல் கேள்வி

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved