news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

தலைவர்களை ஆரத்தழுவுவது தான் வெளியுறவு கொள்கையா? என ராகுல் கேள்வி

பாஜக எம்பி பதிலடி

4

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பிரதமர் மோடியின் வெளியுறவு கொள்கை என்பது வெளிநாட்டு தலைவர்களை ஆரத்தழுவுவது தான் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கிண்டல் செய்துள்ளார்.

காங். தேசிய மாநாட்டில்...
டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட ராகுல்காந்தி, மத்திய அரசின் வெளியுறவு கொள்கையை விமர்சித்து பேசினார். இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி உள்ளிட்ட வெளிநாட்டுத் தலைவர்களை கட்டிப்பிடிப்பதும், தனிப்பட்ட உறவுகளை மேம்படுத்துவது மட்டுமே வெளியுறவுக் கொள்கையாக பிரதமர் மோடி கருதுவதாக கூறி, மேடையில் இருந்த ஒருவரை ராகுல்காந்தி கட்டிப்பிடித்தார்.

இது உண்மையான வெளியுறவுக் கொள்கை ஆகாது என்ற ராகுல்காந்தி, நாட்டின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ராகுல் காந்தியின் விமர்சனத்திற்கு பாஜக எம்பி பதிலடி
பிரதமர் மோடியின் கட்டிப்பிடிக்கும் பழக்கம் குறித்த ராகுல் காந்தியின் விமர்சனத்திற்கு, இந்திராகாந்தி, ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் பாலஸ்தீனத் தலைவர் யாசர் அராஃபத்தை ஆரத்தழுவிய புகைப்படங்களை பகிர்ந்து பாஜக எம்பி பதிலடி கொடுத்துள்ளார். பிரதமர் மோடியின் வெளியுறவு கொள்கை என்பது வெளிநாட்டு தலைவர்களை ஆரத்தழுவுவதுதான் என ராகுல்காந்தி கிண்டல் செய்திருந்த நிலையில், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மக்களவையில் ராகுல் காந்தி, பிரதமர் மோடியைக் கட்டிப்பிடித்த புகைப்படத்தையும் பகிர்ந்த நிஷிகாந்த் துபே, இதனை வயிற்று எரிச்சல் என்று அழைப்பதா? அல்லது காமத் தீயா? என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Link
எந்த பொண்ணையும் பார்க்கக் கூடாது, DREAM COUPLEக்கு இப்படியொரு நிலைமையா?

எந்த பொண்ணையும் பார்க்கக் கூடாது, DREAM COUPLEக்கு இப்படியொரு நிலைமையா?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வாக்காளர்களுக்கு சாபமிட்ட ஆர்.எஸ்.பாரதி

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved