news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

பாஜகவும் திமுகவும் நேரடி கூட்டணியில் உள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் தகவல்

யாரும் தப்ப முடியாது

9

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சபாநாயகர் ஓம் பிர்லாவின் தேநீர் விருந்தில் திமுக எம்.பி. கனிமொழி பங்கேற்றதன் மூலம், பாஜக உடன் நேரடி கூட்டணி உறுதி ஆகிவிட்டதாக அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.

2001ஆம் ஆண்டு சூழல்...
இதுகுறித்து அமைச்சர் நிர்மல்குமார் கூறி இருப்பதாவது;
திமுக ஏற்கெனவே, பாஜகவுடன் மறைமுகக் கூட்டணியில் இருந்தது. இப்போது நேரடியாகவே கூட்டணியில் இருக்கின்றனர். திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன், ‘திருச்சி சிவா விரைவில் அமைச்சராக மாறுவார்’ என்கிறார். இதிலிருந்தே இவர்களது பேச்சுவார்த்தை முடிந்து அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிட்டார்கள் என்பது தெளிவாகப் புரிகிறது.
அதேபோல, திமுக முன்னாள் எம்பி கனிமொழி சோமு, ‘அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை’ என்கிறார். அதையேதான் பாஜகவின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசனும் தெரிவிக்கிறார். இதன்மூலம் அவர்கள் மீண்டும் 2001ஆம் ஆண்டு சூழலுக்கே சென்றுவிட்டனர் என்பது தெரிகிறது.

திமுக தயார்...
தமிழகத்தில் பாஜகவுக்கு முதன்முதலில் மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத்ததே திமுக தான். மீண்டும் தங்களது குடும்பங்களையும் சொத்துக்களையும் காப்பாற்றிக் கொள்ளவும், வழக்குகளில் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ளவும் பாஜகவுடன் நேரடியாகக் கூட்டணி வைக்க திமுக தயாராகிவிட்டது தெளிவாகத் தெரிகிறது.


எதிர்த்து வாக்களிப்பார்களா?
தொகுதி மறுவரையறை விஷயத்தில், ஏப்ரல் மாதத்தில் எடுத்த முடிவின் அடிப்படையில், ‘நாங்கள் எதிர்த்து வாக்களிப்போம்’ என்று திமுக தரப்பில் இருந்து இதுவரை ஒரு வார்த்தைகூட வரவில்லை. தவெக கொண்டுவந்த தீர்மானத்தை திமுக ஆதரித்துள்ளது. ஆனால் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை சம்பந்தமான மசோதா வந்தால், ‘நாங்கள் எதிர்த்து வாக்களிப்போம்’ என்று இதுவரை ஒரு வார்த்தைகூடக் கூறவில்லை.


யாரும் தப்ப முடியாது
ஏப்ரல் மாதத்திற்கும் இப்போதைய சூழலுக்கும் என்ன மாறியுள்ளது? மக்களிடம் கொள்ளையடித்த பணத்தைக் காப்பாற்ற ஒன்றிய அரசின் உதவி தேவைப்படுகிறது. தங்களைக் காப்பாற்றிக்கொள்ள தமிழகத்தின் அனைத்து நலன்களையும் அடமானம் வைத்து, டெல்லியிடம் திமுக கொத்தடிமையாகச் சரணடைந்து விட்டது. டாஸ்மாக் மற்றும் மின்சாரம் போன்ற துறைகளில் ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.
இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

Related Link
தமிழில் பேசுவதில் சிரமம் இருப்பதாக நிதியமைச்சர் ஒப்புதல்

தமிழில் பேசுவதில் சிரமம் இருப்பதாக நிதியமைச்சர் ஒப்புதல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பேரணி விவகாரம், காவல்துறைக்கு நீதிபதி கடும் கண்டனம்

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved