Also Watch
Read this
சட்டப்பேரவையில், தமிழில் பேசுவதில் தமக்கு சிரம ம் இருப்பதாக நிதியமைச்சர் மரிய வில்சன் ஒப்புக் கொண்டதுடன், எதிர்க்கட்சிகளிடம் இருந்து கற்றுக் கொள்வதாகவும், வரும் காலத்தில் தவறுகளை திருத்திக் கொள்வதாகவும் உறுதி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நிதி அமைச்சர்...
சட்டப்பேரவையில், நிதி அமைச்சர் மரிய வில்சன் பேசியதாவது;
முன்னாள் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனையும் என்னையும் ஒப்பிட்டுப் பேசினார்கள். நாங்களும் இதுகுறித்து விவாதித்தோம். மொழி எனக்கு ஒரு பிரச்சினை தான். அதை நான் மறுக்கவில்லை. அன்று கொஞ்சம் ஆவேசப்பட்டது உண்மைதான். எனக்கும் தாய்மொழி தமிழ்தான். நான் வளர்ந்தது திருவாரூர், பிறந்தது புதுச்சேரி. படித்தது சென்னை. என்னை இப்போது தத்தெடுத்தது ஆர்.கே.நகர். இந்த நான்கு இடத்திலும் நான் சுற்றி சுற்றி வந்து உள்ளேன்.

திருத்திக் கொள்வோம்
சட்டப்பேரவை உறுப்பினர்கள் நிறைய பேர் கூறினார்கள். அவை அனைத்தும் எங்களுக்கு தகவல்தான். நான் அதை மறுக்கவில்லை. இந்த இடம் எங்களுக்கு முதல் முறை. சில விஷயங்களை திருத்திக் கொள்வோம். உங்களிடமிருந்தும் கற்றுக் கொள்வோம்.

விரிவான அறிக்கை தயார்
நிதியமைச்சராக பொறுப்பேற்ற முதல் நாளே, கடந்த திமுக ஆட்சியில் அரசுத் துறைகளின் வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்து விரிவான அறிக்கை தயார் செய்ய முதல்வர் எனக்கு உத்தரவிட்டார். மூன்று துறைகளின் வரவு செலவு கணக்கு குறித்த விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டு முதல்வர் மேசையில் உள்ளது. அரசுக்கு இழப்பை பொறுத்தவரை சில லட்சங்கள் முதல் பல ஆயிரம் கோடிகளில் இருக்கலாம். அந்த அறிக்கையை முதல்வர் எப்போது வேண்டுமானாலும் வெளியிடுவார்.

அன்றும் இன்றும் என்றும்
வெற்றி அடைவதற்கு குறுக்கு வழியை அடையாமல் உண்மையுடன் இருந்தால் எல்லாம் சாத்தியம் என்பதற்கு முதல்வர் விஜய்யே எடுத்துக்காட்டு. அன்றும் இன்றும் என்றும் உண்மைக்கு புறம்பாக தவெகவினர் பேசுவதில்லை.

’குறி வைத்தால் தவறமாட்டேன், தவறுமானால் குறியே வைக்கமாட்டேன்’ என்ற எம்ஜிஆர் வசனத்தை ரீ-டிரென்ட் செய்து சாதித்தவர் முதல்வர் விஜய்.
இவ்வாறு நிதி அமைச்சர் மரிய வில்சன் பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved