Also Watch
Read this
By: Fyrose Banu

அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி மற்றும் ஆத்திப்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கட்சி தலைமை அறிவுறுத்தலின்படி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பங்கேற்ற நிலையில் வாறுகால் சுத்தம் செய்யவில்லை, தண்ணீர் வரவில்லை என பொதுமக்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி மற்றும் ஆத்திபட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் தவெக கட்சி தலைமை அறிவுறுத்தலின்படி தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். 
இந்த கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் பலர், கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் முறையாக கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்யப்படுவதில்லை, பல நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை என கிராம சபை கூட்டத்தில் சரமாரியாக புகார் தெரிவித்தனர். மேலும் பலர் தங்களது கோரிக்கை களை முன்வைத்தனர். இதேபோல அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல இடங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved