news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

தமிழ்நாட்டிலே தொடரும் கொ*லகளே சாட்சி என உதயநிதி சாடல்

தோற்றுக் கொண்டிருக்கும் அரசு

8

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதில் இந்த அரசு எந்த அளவுக்கு தோற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கு தமிழ்நாட்டிலே தொடரும் கொ*லகளே சாட்சி என எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.

கோவை, அடுத்து திருவொற்றியூர்...
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
சென்னை, திருவொற்றியூரில் போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக் கேட்டதால், அரசுப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவர் தனுஷ், 30 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொ* செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி தருகிறது. கோவையில் போதை கும்பலை தட்டிக் கேட்டதற்காக கல்லூரி மாணவர் அமுதன் கொ* செய்யப்பட்ட, அடுத்த சில தினங்களில் சென்னையிலும் இத்தகைய கொடூரம் நிகழ்ந்துள்ளது.

தோற்றுக் கொண்டிருக்கும்...
சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதில் இந்த அரசு எந்த அளவுக்கு தோற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கு தமிழ்நாட்டிலே தொடரும் கொ*களே சாட்சி.
போதைப் பொருள் பயன்படுத்துவதையோ, விற்பதையோ அம்பலப்படுத்தினால், அவர்கள் கொ* செய்யப்படுவார்கள் என்பது, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் விடப்படும் எச்சரிக்கை. நிர்வாகத்திறனற்ற இந்த கோமாளி சர்க்காரை கண்டு சமூக விரோதிகளுக்கு துளியும் பயமில்லை என்பதே இதற்கு காரணம்.

என்ன காரணம்?
பள்ளி, கல்லூரிகளில் இத்தகைய சம்பவங்கள் நடப்பதை அரசு கண்டும் காணாமல் வாயை மூடிக் கொண்டு இருப்பது வெட்கக்கேடு. மாணவர் தனுஷ் கொ* வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும்.
இத்தகைய தொடர் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி கல்லூரிகளில் போதைப் பொருள் பயன்பாடு இருக்கிறதா? அதற்கு என்ன காரணம்?

கவுன்சிலிங் தர வேண்டும்
இதன் பின்னால் யார் இருக்கிறார்கள்? என்பதை எல்லாம் உரிய முறையில் விசாரித்து இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வன்முறை எதற்கும் தீர்வல்ல என்பதை உணர்த்தும் வகையில் மாணவர்கள் மத்தியில் கவுன்சிலிங் வழங்கி போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.

Related Link
மாநில உரிமைக்காக குரல் கொடுப்போம் என முதல்வர் விஜய் உறுதி

மாநில உரிமைக்காக குரல் கொடுப்போம் என முதல்வர் விஜய் உறுதி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேரளம் செல்லும் வழியை தவற விட்ட நடிகர் மம்மூட்டிக்கு உதவியருக்கு நன்றி

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved