Also Watch
Read this
By: Fyrose Banu

சுதந்திரம் கிடைத்தது 80ஆண்டுகள் ஆகியும் 18 குடும்பத்தினருக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை எனக் கூறி வீடுகளில் கருப்புக் கொடி கட்டி சாலையில் சமைத்து குழந்தைகளுடன் உணவு சாப்பிட்டும், சாலை தான் நிரந்தரம் என பாய் போட்டு படுத்து உறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமம் ஊராட்சி காளான் வட்டம் உட்பட்ட ஏரி மற்றும் அதனைச் சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த நிலையில் காலங்காலமாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் ஜமீன் ரயத்துவாரி பட்டா வைத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காலப்போக்கில் அதில் பல பேருக்கு வருவாய்த் துறையினரால் பட்டாக்களும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்குள்ள 18 குடும்பங்களுக்கு தற்போது வரை பட்டா வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரிகளில் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் புகார் அளித்ததன் காரணமாக தங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என ஆதங்கம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சுதந்திரம் கிடைத்து 80 ஆண்டுகள் ஆகியும் இந்த பகுதியில் வசிக்கக்கூடிய 18 குடும்பங்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என கூறி சுதந்திர தின விழா இன்று தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி வீடுகளில் கருப்புக் கொடி கட்டியும் அனைவரும் தெருவில் சமைத்தும் தெருவில் படுத்து உறங்கியும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சமைக்கப்பட்ட உணவை தங்கள் பிள்ளையுடன் நடுத்தெருவில் சாப்பிட்டு தங்களை எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது மேலும் இந்த சம்பவம் அறிந்த துறை சார்ந்த அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved