news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

ரூ.40,000 க்கும் மேல் பரிசு தொகை கொடுத்த தலைமை ஆசிரியர்.!

திருப்பத்தூர்

7

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tpt 02

கசிநாயக்கன்பட்டி பள்ளியில் சுதந்ததிர தின விழாவை முன்னிட்டு அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு 40 ஆயிரம் ரூபாயிக்கும் மேல் பரிசு தொகை கொடுத்து ஊக்குவித்த தலைமை ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

நாடு முழுவதும் இன்று 80வது சுதந்திர தின பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் காரணமாக இன்று திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கசிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் குழந்தைசாமி தலைமையில் சுதந்திர தின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அப்போது துப்புரவு பணியாளர்கள், மற்றும் 10 மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் 40 ஆயிரத்திற்கும் மேல் பரிசு தொகையினை வழங்கினார்.

அதேபோல பள்ளியில் பயின்று வரும் மாணவ மாணவிகள் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றதால் அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் பரிசு தொகை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் தங்களது தனி திறமைகளை வெளிப்படுத்தி பேச்சுப்போட்டி நடனம் என‌ பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. மேலும் பள்ளி ஆசிரியர்கள் மஞ்சுளா, சபரி ராஜன், முல்லை பாரி, சதீஷ்குமார், மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

600-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved