news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

விமான நிலைய கட்டுப்பாட்டாளர் செயலால் பெரும் விபத்து தவிர்ப்பு

ஒரே வான்வெளி

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
US Airplane issue

ஒரே வான்வெளியில் வந்த 2 அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள்

அமெரிக்காவின் பீனிக்ஸ் ((Phoenix))நகரில், ஒரே விமான எண் வழங்கப்பட்ட இரண்டு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் ஒரே வான்வெளியில் அருகருகே வந்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிகாகோவில் இருந்து வர வேண்டிய விமானம் வானிலை காரணமாக தாமதமானது. இதற்கிடையில், அதே எண்ணை கொண்ட மற்றொரு விமானம் பீனிக்ஸில் இருந்து திட்டமிட்டபடி புறப்பட்டது.

சிகாகோ விமானம் பீனிக்ஸில் தரையிறங்க முற்பட்டபோது பீனிக்ஸ் விமானமும் அங்கிருந்து புறப்பட்டு மேல்நோக்கிச் சென்றது. இரு விமானங்களும் ஒரே Frequency மற்றும் ஒரே வான்வெளியிலும் சந்தித்தன. இதனை கவனித்து விழிப்புணர்வுடன் செயல்பட்ட விமான நிலைய கட்டுப்பாட்டாளர், இரு விமானங்களுக்கும் தனித்தனியாக வழிக்காட்ட விமானங்கள் பாதுகாப்பான தூரத்திலும், வெவ்வேறு உயரங்களிலும் பராமரிக்கப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் புளோரஸ் தீவில் ((Flores Island)) 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 20 பேர் உயிரிழந்தனர். பூமிக்கு அடியில் சுமார் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தின்போது கட்டடங்கள் குலுங்கியதால், பொதுமக்கள் அச்சத்துடன் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

ஒரு சில கட்டடங்கள் சரிந்தும் விழுந்தன. நாகேகியோ ((Nagekeo)) மற்றும் பிமா ((Bima)) போன்ற பகுதிகளில் சுமார் ஒரு நிமிடத்திற்கு அதிர்வுகள் கடுமையாக உணரப்பட்டதாக கூறப்படுகிறது. நுசா தெங்காரா, சுலாவேசி மாகாணங்களில் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து பல தொடர் அதிர்வுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Related Link
முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் விமானம்

முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் விமானம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எருமை மாட்டு மேல் மழை பெய்தது போல்...!

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved