Also Watch
Read this
By: Fyrose Banu

தருமபுரி மாவட்டம் அரூரில் விசிக கட்சியின் நிர்வாகிகள் மாற்றப்பட்டதால் மண்டல செயலாளரை முற்றுகையிட்டதால் பரபரப்புஏற்பட்டுள்ளது கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டையில் நடைபெற உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் "தமிழ் தேசிய எழுச்சி மாநாடு"க்கு முன்னதாக அரூர் சட்டமன்ற தொகுதியில் ஒன்றிய செயலாளர்கள் திடீரென மாற்றப்பட்டதால் விசிகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரூர் தொகுதிக்கு மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா பரிந்துரையின் பேரில் புதிய ஒன்றிய செயலாளர்கள் 3 நாட்களுக்கு முன் பொறுப்பேற்றனர். அவர்கள் மாநாட்டு பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர். அரூர் தொகுதி முழுவதும் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டன. மாநாட்டுக்கு செல்ல 228 வாகனங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, தொண்டர்களுக்கு உணவு, போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் 3 நாட்களிலேயே நான்கு ஒன்றிய செயலாளர்களை மாற்றி வேறு நபர்களுக்கு பொறுப்பு அறிவிக்கப்பட்டது. இதனால் மாநாட்டு பணிகள் முடங்கியது. இதற்கு எதிர்பு தெரிவித்து அரூர் விசிக தொண்டர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மண்டல செயலாளர் ஜானகிராமன் வீட்டை முற்றுகையிட்டனர்.

கிராமப்புற தொண்டர்களையும், மாவட்ட செயலாளர் பரிந்துரைத்த நிர்வாகிகளையும் மண்டல செயலாளர் புறக்கணிக்கிறார் என குற்றம்சாட்டினர். அதன் பின்னர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அரூர் மாவட்ட செயலாளரை சாக்கன் சர்மாவை முற்றுகையிட்டனர்.

அறிவித்த பொறுப்பை மீண்டும் வழங்க வேண்டும் என்றும் இல்லையெனில் மாநாட்டை புறக்கணிப்போம் என தொண்டர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து கட்சி தலைமை உடனே தலையிட்டு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனால் அரூர் விசிகவில் பரபரப்பு நிலவி வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved