Also Watch
Read this
By: Manigandan Raja

சிந்து நதிநீர் வழங்காவிடில் பதிலடி கொடுக்கப்படும்
சிந்து நதிநீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதை நிறுத்தும் வரை, ஒப்பந்தம் மீண்டும் செயல்பாட்டுக்கு வராது என இந்தியா கூறியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், தண்ணீர் விவகாரத்தில் சமரசம் இல்லை என்றும், இந்தியாவுக்கு நேரடி பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
இந்தியாவின் 5வது தலைமுறை AMCA போர் விமானங்கள்
இந்தியாவின் 5வது தலைமுறை AMCA போர் விமானங்களுக்கான இன்ஜின்களை உள்நாட்டிலேயே வடிவமைத்து, தயாரித்து வழங்க Reliance Industries மற்றும் Rolls-Royce இடையே பிரமாண்ட கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்காக அதிநவீன தொழில்நுட்ப மையத்தை அமைக்க உள்ளதாக இருநிறுவனங்களும் அறிவித்துள்ளனர். இக்கூட்டணியானது, ரோல்ஸ் ராய்ஸின் விமான இயந்திர தொழில்நுட்ப அனுபவத்தையும், ரிலையன்சின் தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் திட்டச் செயலாக்கம் ஆகியவற்றில் உள்ள திறன்களையும் ஒன்றிணைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அசாம் மாநிலத்தில் வெளுத்து வாங்கும் கனமழை
அசாமில் மழை வெள்ளத்தில் பலியானோரின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது. ஏழு மாவட்டங்களில் சுமார் 78,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் 31 நிவாரண முகாம்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அவற்றில் வீடுகளை இழந்த 5,000-க்கும் மேற்பட்டோர் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த மழைவெள்ளத்தால் மொத்தமாக 8,268 ஹெக்டேர் பயிர் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் 42,105 விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அசாம் மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved