news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news கேரளம் செல்லும் வழியை தவற விட்ட நடிகர் மம்மூட்டிக்கு உதவியருக்கு நன்றி
tv

Also Watch

கேரளம் செல்லும் வழியை தவற விட்ட நடிகர் மம்மூட்டிக்கு உதவியருக்கு நன்றி

நள்ளிரவில் 15 கி.மீ. தூரம் பைக்கில் வழிகாட்டிய தமிழர்

12

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கேரளம் செல்லும் வழியை தவறவிட்ட நடிகர் மம்மூட்டிக்கு, பாண்டியன் என்ற தமிழர் நள்ளிரவில் 15 கிலோ மீட்டர் தூரம் பைக்கில் சென்று வழி காட்டியுள்ளார்.

காரைக்குடியில் மம்மூட்டி
காரைக்குடியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, நடிகர் மம்மூட்டியும், அவரது மேலாளரும் நள்ளிரவில் கேரளம் நோக்கி காரில் சென்று உள்ளனர். திருப்பத்தூர் பகுதியில் சென்றபோது, கூகுள் மேப் காட்டிய வழி அடைக்கப்பட்டு இருந்ததால் வழி தெரியாமல் சுற்றிய அவர்களை, பாண்டியன் என்ற நபர் பார்த்து, தனது பைக்கில் 15 கிலோ மீட்டர் தூரம் சென்று வழிகாட்டி உள்ளார்.

இதையடுத்து மம்மூட்டி, அவரை அன்போடு கட்டிப்பிடித்து நன்றி தெரிவித்தார். இந்த சம்பவத்தை மம்மூட்டியின் மேலாளர் முகநூலில் பகிர்ந்து உள்ளார்

என்ன நடந்தது?
மம்மூட்டி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பானது காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை அவரே தயாரிக்க, இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து அவசர அவசரமாக காரைக்குடியில் இருந்து, கேரளம் நோக்கி நடிகர் மம்மூட்டி மற்றும் அவரது மேலாளர் ஜார்ஜ் உள்ளிட்டேரும் காரில் பயணித்துக்
கொண்டிருந்தனர். இவர்களது கார் திருப்பத்தூர் பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலைக்கு வந்தபோது அந்த பாதையானது மூடப்பட்டிருந்தது. கூகுள் மேப் உதவி உடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சுற்றித் திரிந்துள்ளனர்.

 வழி தெரியவில்லை, வந்தார் தமிழர்
நள்ளிரவு நேரம் என்பதால், காரைக்குடிக்கு திரும்பலாம் என முடிவெடுத்து உள்ளனர். அந்த நேரத்தில் யாரும் இல்லாததால், உதவி கேட்க முடியவில்லை. இந்த நிலையில், பெட்ரோல் பங்கில் ஒருவரிடம் வழி கேட்கவே, அவர் ’ஏற்கெனவே நீங்கள் சுற்றித்திரிந்த பாதை தான்’ எனக் கூறியுள்ளார். அங்கு உறங்கிக் கொண்டிருந்த ஒருவர், நீங்கள் கேரளாவா? என கேட்டுள்ளார், இதற்கு ஆமாம் என்று சொல்ல நடிகர் மம்மூட்டியை காரில் அந்த நபர் பார்த்துள்ளார்.

15 கி.மீ. பயணம்
பின்னர், தன்னை பின் தொடருமாறு கூறி, 15 கிலோ மீட்டர் தூரம் அழைத்துச் சென்று கேரளாவின் வழிப் பாதையை காட்டியுள்ளார், காரைக்குடியை சேர்ந்த பாண்டியன். அப்போது அவருக்கு நடிகர் மம்மூட்டி உடன் இருந்த மற்றொரு நடிகர் ரமேஷ் பிஷாரடி நன்றி தெரிவித்தனர். மேலும், பாண்டியனை கட்டியணைத்து புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். இந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

Related Link
திரையுலகிற்கு வந்து 22 ஆண்டுகள் நிறைவு என நடிகர் விஷால் நெகிழ்ச்சி

திரையுலகிற்கு வந்து 22 ஆண்டுகள் நிறைவு என நடிகர் விஷால் நெகிழ்ச்சி

            


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வரதராஜ பெருமாள் கோவிலில் சமபந்தி போஜனம்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved