news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

ஈரானுடனான போரில் அமெரிக்காவின் முக்கிய இலக்கு

ஹார்முஸ் நீரிணை

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜே.டி. வான்ஸ்

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பேச்சு 

ஈரானுடனான போரில் அமெரிக்காவின் முக்கிய இலக்கு, எண்ணெய் மற்றும் பெட்ரோல் விலையை குறைவாக வைத்திருப்பதே என துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார். ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுப்பது அடுத்த முக்கிய நோக்கம் என்றும் அவர் கூறினார்.

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படுவதால், உலகளவில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாக தெரிவித்த ஜே.டி. வான்ஸ் எரிபொருள் விலையை கட்டுப்படுத்த அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

ஜப்பானின் சிபா மாநிலத்தில் வரலாறு காணாத கனமழை 

ஜப்பானின் சிபா மாநிலத்தில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் 8க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கனமழையால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பாகிஸ்தானில் போலீசாரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு

பாகிஸ்தானின் லாகூர் நகரில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட 2 துப்பாக்கிச் சூடு தாக்குதல்களில் 3 காவலர்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 4 பேர் படுகாயமடைந்தனர். பதாமி பாக் ((Badami Bagh )) பகுதியில் 2 காவலர்களைச் சுட்டுக் கொன்ற மர்ம நபர்கள், ஒரு மணி நேரத்திற்குள் யதீம் கானா சௌக் ((Yateem Khana Chowk )) பகுதியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதில் காவலர் ஒருவர் உயிரிழந்த நிலையில், 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். காவல்துறையைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களுக்குத் தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு ((TTP)) அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக பஞ்சாப் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

Related Link
பிரிட்டனில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு முக்கிய பதவி

பிரிட்டனில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு முக்கிய பதவி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

600-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved