Also Watch
Read this
By: Manigandan Raja

பிரிட்டன் பிரதமரின் நிபுணத்துவ ஆலோசகராக நியமனம்
பிரிட்டன் பிரதமர் ஆன்டி பர்ன்ஹாம், இந்திய வம்சாவளி உத்தி வகுப்பாளரான கெளதம் ரங்கராஜனை தனது அரசில் நிபுணத்துவ ஆலோசகராக நியமித்துள்ளார். இவர், பிபிசி தொலைக்காட்சியின் முன்னாள் உத்தி வகுப்பாளரும், இசைக் கலைஞருமாவார். இவர் இந்த வாரமே தனது பொறுப்பை ஏற்பார் என பிரிட்டன் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பலூசிஸ்தானில் பாக். ராணுவம் வான்வழி தாக்குதல்
பலூசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதல்களில் 21 பேர் கொல்லப்பட்டனர். பலூசிஸ்தான் தங்களை தனி நாடாக அறிவித்து சுதந்திர தினம் கொண்டாடிய நிலையில், சுராப் மற்றும் குவாதர் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.

இதனால் ஆத்திரமடைந்த பலுாச் விடுதலை படையினர், சாகாய் மாவட்ட காவல் நிலையம் மீது குண்டு வீசியதில் 3 போலீசார் இறந்தனர்.
கைபர் பக்துன்க்வா, பலூசிஸ்தானில் ராணுவம் தாக்குதல்
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மற்றும் பலூசிஸ்தான் மாகாணங்களில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் 70-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். வடக்கு வஜிரிஸ்தான் மற்றும் பன்னு மாவட்டங்களில் மட்டும் ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 60-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளும், பலூசிஸ்தானில் 20 பேரும் கொல்லப்பட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved