news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஹோர்முஸ் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது
tv

Also Watch

ஹோர்முஸ் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது

எதுவும் செய்ய முடியாது

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அதிபர் டிரம்ப்

ஈரானால் எதுவும் செய்ய முடியாது எனவும் டிரம்ப் திட்டவட்டம்

ஹோர்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் ஜலசந்தி மீது அமெரிக்கா தனது முழு கட்டுப்பாட்டையும் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தங்களின் கடற்படையை அனைத்துத் தரப்பினரும் எஃகு சுவர் என்று அழைப்பதாகவும், இதை எதிர்த்து ஈரானால் எதுவும் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டர் விபத்து

அமெரிக்க ராணுவத்தின் அப்பாச்சி தாக்குதல் ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், 2 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் வயல்வெளியில் விழுந்து தீப்பிடித்ததில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவியதால் வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

மத்திய டெக்சாஸ் பகுதியில் வயல்வெளியில் விழுந்து ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. விபத்துக்கான காரணம் என்ன என்று அறிவிக்கப்படவில்லை.

2025-ல் ஏமன் மீது அமெரிக்கா தாக்குதல்

ஏமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹௌதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து கடந்தாண்டு அமெரிக்க நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பென்டகன் ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்த ரகசியமற்ற மதிப்பீட்டு அறிக்கை, பொதுமக்கள் உயிரிழப்புகள் குறித்த வருடாந்திர அறிக்கையின் ஒரு பகுதியாக அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டது.

Related Link
24 லட்சம் பெண் குழந்தைகளுக்கு உயர் கல்வி மறுப்பு

24 லட்சம் பெண் குழந்தைகளுக்கு உயர் கல்வி மறுப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் பலி.!

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved