Also Watch
Read this
By: Manigandan Raja

1952-ல் இந்தியா தனது முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற்றது
இந்திய கிரிக்கெட் அணி தனது வரலாற்றில் 600-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 1932-ல் தொடங்கிய இந்தியாவின் டெஸ்ட் பயணம், தற்போது 600 போட்டிகளை கடந்துள்ளது.
599 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 86 வெற்றிகள், 188 தோல்விகள், 224 டிராக்கள், ஒரு டை என பதிவு செய்துள்ளது. 1952-ல் இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் இந்தியா தனது முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற்றது. தற்போது இலங்கைக்கு எதிரான இந்த 600-வது டெஸ்ட், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமான தருணமாக அமைந்துள்ளது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அதிரடி வெற்றி
டி.என்.பி.எல் தொடரின் 19-வது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, மதுரை பேந்தர்ஸ் அணியை 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் குவித்தது.

241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மதுரை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved