news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

ஆதி கும்பேஸ்வரர் கோயில் யானை கொடிக்கு மரியாதை

திருக்கோயில் கொடிமரம்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
யானை கொடிக்கு மரியாதை

நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் மங்களம் யானை நெற்றியில் தேசியக்கொடி வண்ணத்தில் மலர் மாலைகளால் அலங்கரித்து, இருபுற காதுகளில் மற்றும் நெற்றியிலும் தேசிய கொடியை வரைந்தும் அழகாக காட்சியளித்த மங்கலம் யானைக்கு, திருக்கோயில் கொடிமரம் அருகே தீபாரதனை செய்யப்பட்டது.

யானையின் மீது தேசியக்கொடி இருபுறமும் போர்த்தப்பட்டு கோயில் அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள கொடிமரம் அருகே வந்து, திருக்கோயில் செயல் அலுவலர் முருகன் மற்றும் யானை பாகன் அசோக் ஆகியோர் முன்னிலையில் தும்பிக்கையை நெற்றிக்கு மேல் உயர்த்தி தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தியது.

இதனைக் கண்டு கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த ஏராளமான பக்தர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்தனர். மங்களம் யானையுடன் இணைந்து செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர்.

Related Link
ஜோலார்பேட்டை அருகே சாலையோரத்தில் சமைத்து போராட்டம்

ஜோலார்பேட்டை அருகே சாலையோரத்தில் சமைத்து போராட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கோதையாற்றில் படகு சவாரி மீண்டும் தொடக்கம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved