Also Watch
Read this
By: Manigandan Raja

கொலம்பியா வீராங்கனை எமிலியானோவிடம் தோற்றார்
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றிலேயே அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், கொலம்பியாவின் எமிலியானோ அராங்கோ ஆகியோர் மோதினர்.
இதில் சிறப்பாக விளையாடிய கொலம்பியா வீராங்கனை 6-க்கு 2, 6-க்கு 2 என வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம், அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். இவர், ஏற்கெனவே சிட்டி ஓபன் டென்னிஸ், இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் உள்ளிட்ட தொடர்களிலும் முதல் சுற்றோடு வெளியேறினார்.
டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசை பட்டியல்
கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதின் மூலம், சர்வதேச டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் 4 இடங்கள் முன்னேறி 6-வது இடம் பிடித்துள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வீரர், வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்டுள்ளது.

இதில், இத்தாலியின் ஜானிக் சின்னர் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். 2-வது இடத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசும், 3-வது இடத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ்வும், 4-வது இடத்தில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிமியும், 5-வது இடத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் உள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved