Also Watch
Read this
By: Fyrose Banu

அம்பத்தூர் அடுத்த பாடியில் பிரசித்திபெற்ற அருள்மிகு படவட்டம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு அறங்காவலர் குழு தலைவர் உமா மோகன் தலைமையில் பாடி சிவன் ஆலயத்தில் இருந்து 1008 பக்தர்கள் பால்குடம் ஏந்தி மேளதாளம் முழங்க ஊர்வலமாக ஓம்சக்தி பராசக்தி என்ற மந்திரம் முழங்கி அம்மன் ஆலயத்தை வந்தடைந்தனர் தொடர்ந்து, அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர்

பாடி அருள்மிகு படவட்டம்மன் கோவில் ஆடிமாத திருவிழா

1008 பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்

இதனை அடுத்து, பக்தர்கள் அலகு குத்துதல் தீச்சட்டி ஏந்துதல் என தங்கள் நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தினர்.இதனை கண்ட பொதுமக்கள் பக்தி பரவசம் பொங்க அரோகரா அரோகரா என கோஷம் முழங்கினர்.

சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலும் கோவிலில் அம்மனை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு சுமார் 2 ஆயிரம் நபர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.


© Copyright Newstamil 24x7 2026. All rights reserved