news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

ரஜினிகாந்தின் 51வது ஆண்டு திரைப்பயண கொண்டாட்டம்

2ஆவது கட்ட படப்பிடிப்பு

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தர்மன் படக்குழுவினர்

கேக் வெட்டி கொண்டாடிய தர்மன் படக்குழுவினர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்பயணத்தை தொடங்கி 51 ஆண்டுகள் ஆவதை ஒட்டி தர்மன் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் தர்மன் திரைப்படத்தின் 2ஆவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவை தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது.

விஜயின் தீவிர ரசிகை என நடிகை ஸ்ரேயா பேட்டி

விஜயின் தீவிர ரசிகை என்று தெரிவித்துள்ள நடிகை ஸ்ரேயா சரண், அவரது அரசியல் பயணம் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முதல்வர் விஜய் மிகவும் எளிமையானவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

"பேங் பேங்" திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பு

நடிகர் பிரபு தேவா - வடிவேலு இணைந்து நடித்துள்ள "பேங் பேங்" திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.இயக்குநர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில், கண்ணன் ரவி குரூப்ஸ் தயாரித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படம் ஜாம்பிக்கள் தொடர்பான த்ரில்லர் காமெடி வகையில் உருவாகியுள்ளது.

கௌபாய் வேடத்தில் பிரபு தேவா, வடிவேலு இணைந்து ஜாம்பிக்களுடன் சண்டையிடும் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், நிகழாண்டு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Link
மகுடம் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

மகுடம் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மூதாட்டியிடம் பட்டப்பகலில் செயின் பறிப்பு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved