Also Watch
Read this
By: Fyrose Banu

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் சேதமடைந்த மந்திதோப்பு சாலையை விரிவுபடுத்தி சீரமைக்க வலியுறுத்தி, மந்திதோப்பு சாலை அனைத்து வியாபாரிகள் நலச் சங்கம், குயிருப்போர் சங்கங்கள், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் எட்டையபுரம் சாலை - மங்கள விநாயகர்கோவில் சந்திப்பு பகுதியில் 100க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையை விரிவாக்கம் செய்து சீரமைக்காத அதிகாரிகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர், நகராட்சி அதிகாரிகள் பேச்சவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையெடுத்து கோவில்பட்டி தாசில்தார் அப்பணராஜ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சை வார்த்தை நடத்தினார். தங்களுக்கு ஒரு தீர்வு காணும் வரை போராட்டத்தை கைவிட போதவில்லை என்று கூறி சாலை மறியல் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்து மினிபேருந்தில் ஏற்றினர். 
அப்போது போராட்டத்தில் பங்கேற்ற நாம்தமிழர் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் ரவிக்குமார் என்பவரை, போலீசார் வலுக்கட்டயமாக மினிபேருந்தில் ஏற்றியது மட்டுமின்றி, மேற்கு காவல் நிலைம உதவி ஆய்வாளர் நியூட்டன் மற்றும் போலீசார் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதே போன்று போராட்டத்தில் ஈடுபட்ட முதியவர்களையும், உடல் நிலை பாதிக்கப்பட்டவர்களையும் கொழுத்தும் வெயிலில் வலுக்கட்டயமாக மினிபேருந்தில் ஏற்றினர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக 27பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர். இந்த சாலைமறியல் போராட்டத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved