news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மீது விவசாயி புகார்..!

ஈரோடு

11

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tvk 2

சத்தியமங்கலம் அருகே தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடம்பூர் காவல் நிலையத்தில் விவசாயி ஒருவர் மனு அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த செல்வன் என்பவருக்குச் சொந்தமான 6 ஏக்கர் நிலம் கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மூலக்கடம்பூரில் உள்ளது. இந்த நிலத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு செல்வராஜ் என்பவர் செல்வத்திற்குக் விற்றிருந்தார்.

தற்போது, தான் கொடுத்த அதே விலைக்கு நிலத்தைத் திருப்பித் தருமாறு கேட்டுச் செல்வராஜ் பிரச்சினை செய்து வருகிறார். ​இதனைத் தொடர்ந்து, செல்வம் தனது தோட்டத்தில் அமைத்திருந்த சாலையை எரித்தும், தோட்டத்தைச் சுற்றி வைத்திருந்த சிசிடிவி கேமராக்களையும் செல்வராஜும் அவரது ஆட்களும் சேர்ந்து சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து விவசாயி செல்வத்தின் மகன் சிவபிரகாஷ் கடம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இருப்பினும், நிலத்தை விற்ற செல்வராஜின் உறவினரான டேம் ராஜாவின் மகனும், சத்தியமங்கலம் கிழக்கு ஒன்றியத்தின் தவெக இணைச் செயலாளருமான ஸ்ரீதர் மற்றும் ஈரோடு மாவட்டச் செயலாளர் பிரதீப் ஆகியோர் தலையிட்டு இந்த வழக்கை எடுக்கக் கூடாது என காவல்துறையினருக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

​இதன் பின்பு தொடர்ந்து செல்வம் காவல்துறையினருக்கு அழுத்தம் கொடுத்ததால், 10 நாட்களுக்குப் பிறகு நேற்று வழக்கு பதிவு செய்து CSR போட்டு கடம்பூர் காவல்துறையினர் கொடுத்துள்ளனர். ​தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் "குற்றச் சம்பவங்கள் எங்கு நடைபெற்றாலும் நடவடிக்கை எடுப்பேன்" என்று கூறிவரும் நிலையில், தற்போது தங்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் இந்த அநீதியைக் கேட்பாரா? என்று பாதிக்கப்பட்ட விவசாயி வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்வு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved