Also Watch
Read this
By: Fyrose Banu

ஈரோட்டில் மாரியம்மன் கோவிலை எடுக்கக் கூடாது என அப்பகுதி மக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கோவில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
ஈரோடு மாவட்டம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியான மணல்மேடு பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக அருள்மிகு ஸ்ரீ எல்லை மாரியம்மன் திருக்கோவில் இருந்து வருகிறது, இந்த திருக்கோவிலில் அப்பகுதி மக்கள் பலரும் பராமரித்து வணங்கி வருகின்றனர்

இந்த சூழலில் மாற்று மதத்தினை சேர்ந்த சிலர் எல்லை மாரியம்மன் திருக்கோவிலை எடுக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும் அந்த ரீதியாக கோவிலை எடுக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றன

இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்த நிலையில் இன்று கோவில் முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது மேலும் அப்பகுதி மக்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கோவிலில் உள்ள மாரியம்மனை நாங்கள் பராமரித்து வணங்கி வருவதால் யாருக்கும் இடையூறு இல்லாமல் தான் இந்த கோவில் இயங்கி வருவதாகவும் அதனால் கோவிலை எடுக்கக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved