Also Watch
Read this
By: Manigandan Raja

விசாரணை அமைப்புகள் அமைதி ஏன்?
ராகுல்காந்திக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்குமாறு, அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராகுல் மீதான குற்றச்சாட்டு மிக தீவிரமானது என்றால் சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் அமைதியாக இருப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளது.
சுகாதாரமான குடிநீர் விநியோகத்தை உறுதிப்படுத்துக!
நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் சுகாதாரமான குடிநீர் விநியோகத்தை உறுதிப்படுத்த ரயில் நிலையங்களுக்கு மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார். கோவை உள்ளிட்ட சில ரயில் நிலையங்களில் குடிநீரில் கிருமிகள் கலந்துள்ளதாக புகார் வந்ததையடுத்து மத்திய அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

வெறுப்புணர்வை பரப்புவது குறித்தே பேசும் பாஜகவினர்
பாஜகவினர் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தைப் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, நாட்டை பிரிப்பது மற்றும் வெறுப்புணர்வைப் பரப்புவது குறித்தே பேசுகிறார்கள் என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம் செய்தார்.

கோவாவில் காங்கிரஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கார்கே, காங்கிரஸ் கட்சியினருக்கு பாஜகவினர் தேசபக்தியைப் போதிக்கக் கூடாது என்றும் பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved