Also Watch
Read this
By: Manigandan Raja

ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படம்
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் சிக்மா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில் சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம், ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் திரைக்கு வரவிருந்தது.
ஆனால் விஜயின் ‘ஜனநாயகன்’ படம் ஜூலை 23ஆம் தேதி வெளியானதால் ‘சிக்மா’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. பின்னர் ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டாக்ஸிக்’ பட காட்சிகள் குறித்து மனம் திறந்த யாஷ்
டாக்ஸிக் திரைப்படத்தில் கதாநாயகிகள் உடனான நெருக்கமான காட்சிகளைப் பார்க்கும்போது தனது மனைவி ராதிகா பண்டிட்டுக்கு நிச்சயம் சங்கடமாக இருக்கும் என நடிகர் யாஷ் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “கணவர் மற்றொரு நடிகையுடன் நெருக்கமாக நடிப்பதை எந்த மனைவியும் முழுமையாக ஏற்றுக்கொள்வது கடினம் என்றார். அதுபோன்ற காட்சிகளில் நடிப்பது தனக்கும் அசவுகரியமாகத்தான் இருக்கும் என்றவர், மனைவி ராதிகாவும் நடிகை என்பதால் கணவர் மற்றும் நடிகர் ஆகிய இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்வதாக தெரிவித்துள்ளார். யாஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved