Also Watch
Read this
By: Manigandan Raja

பாலியல் அத்துமீறல் தொடர்பாக புகார் அளித்து தற்போது வரை காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் சம்பந்தப்பட்ட நபருக்கு ஆதரவாக செயல்படுவதாக தேசியக்கொடியுடன் பாதிக்கப்பட்ட சிறுமி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நேருஜி நகரைச் சேர்ந்த லீலாவதி தனது மகளை அருகில் உள்ள நபர் ஒருவர் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு வழங்கினார்.
மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறும் பொழுது நாங்கள் கூலி வேலை பார்த்து வருகிறோம் எனக்கு 17 வயது மகள் உள்ளார் அவர் வீட்டிலேயே இருந்து வருகிறார் இன்நிலையில் வீட்டின் அருகே கேசவன் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீடு வாங்கி உள்ளார் அவ்வப்போது அவரது வீட்டை பார்க்க வரும்போது எல்லாம் வீட்டில் என் மகள் தனியாக இருப்பதை பார்த்து தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதும் அதேபோல் வீட்டில் ஆட்கள் இல்லையென்றால் வீட்டிற்குள் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளர்.

இதை எனது மகள் எங்களிடம் தெரிவித்த நிலையில் வடமதுரை காவல் நிலையம் மற்றும் வேடசந்தூர் காவல் நிலையத்தில் கேசவன் மீது புகார் அளித்தோம் வழக்கு பதிவு செய்த வடமதுரை மகளிர் காவல் துறையினர் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை மேலும் வேடசந்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளரின் நேரில் சந்தித்து புகார் கூறியும் அவரும் எந்த ஒரு
நடவடிக்கையும் எடுக்கவில்லை கேசவன் செல்வந்தர் மற்றும் பணம் படைத்தவர் என்பதால் அவருக்கு ஆதரவாக காவல்துறை செயல்படுகிறது.
ஆகவே மாவட்ட ஆட்சியர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போஸ்கோ வழக்கு பதிவு செய்ய வேண்டும் என புகார் மனு வழங்கியுள்ளதாக கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved