news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

சாலையோர கடைகளை அகற்றியதை எதிர்த்து போராட்டம்

அவிநாசி, திருப்பூர்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சாலையோர கடைகள்

திருப்பூர் மாவட்டம் அவிநாசி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரம் தள்ளுவண்டிகள் மற்றும் கட்டில்கள் அமைத்து துணிக்கடை, உணவகம், பூக்கடை, பழக்கடை, பொறிக்கடை, உள்ளிட்ட பல வகையாக 200க்கும் மேற்பட்டோர் தங்களது வாழ்வாதாரமாக சாலையோர கடைகள் வைத்து நடத்தி வருகின்றனர்.

இந்த சாலையோர கடைகளால் வணிகர்களுக்கு வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் எனவே சாலையோர கடைகளை முற்றிலும் அகற்ற வேண்டும் என்றும் அவர்களை ஊருக்கு வெளியே
மாற்று இடத்தில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்த நிலையில், இதுகுறித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர்.

கடந்த 25.11.2025 அன்றய நீதிமன்ற உத்தரவுப்படி அந்த வழக்கில் தொடர்புடைய நான்கு சாலையோர வியாபாரிகளை தவிர மீதம் உள்ளவர்களை அகற்ற நகராட்சி நிர்வாகம் நேற்று அவிநாசி நகராட்சி நிர்வாகத்தினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அவிநாசி போலீசாரின் பாதுகாப்புடன் அவிநாசி புதிய பேருந்து நிலையம் எதிரே இருந்த சாலையோர கடைகளை அகற்ற முற்பட்டபோது.

சாலையோர கடைகளை அகற்றுவதை கண்டித்து குறுக்கிட்ட சி. பி. ஜ, சி.பி.எம், ஏஐடியுசி மற்றும் சி ஐ டி யு தொழிற்சங்கத்தினருடன் நகராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, ஏ ஐ டி யு சி சங்கத்தினர் தாங்களாகவே சாலையோர வியாபாரிகள் தங்களது கடைகளை அகற்றிக் கொள்வர் என கூறி கடைகளை அகற்ற முற்பட்டனர்.


இந்நிலையில் திருப்பூர் மாவட்ட குற்ற பதிவேட்டு கூடம் துணை காவல் கண்காணிப்பாளரும் அவிநாசி பொறுப்பு துணை காவல் கண்காணிப்பாளருமான மனோகர் சம்பவ இடத்திற்கு வந்து, விடாப்பிடியாக சாலையோர வியாபாரிகளை ஒருமையில் பேசியதோடு நகராட்சி தூய்மைப் பணியாளர்களையும் ஒருமையில் பேசி முதுகில் கை வைத்து தள்ளி உடனடியாக கடைகளை அப்புறப்படுத்துங்கள் என ஆக்ரோசமாக பேசினார்.

இதையடுத்து சாலையோர வியாபாரிகள் தாங்களாகவே தங்களது கடைகளை தற்காலிகமாக அகற்றிக் கொண்டனர். இந்நிலையில் சாலையோர வியாபாரிகள் ஏஐடியுசி, சி.பி.ஐ (எம்) சங்கங்கள் சார்பாக
அவிநாசி நகராட்சி அலுவலகத்தின் வளாகத்திற்குள் பெண்கள் உட்பட குடும்பத்துடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்து அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏஐடியுசி மற்றும் சிஐடியு சங்கத்தினர் மற்றும் சாலையோர வியாபாரிகளிடம் நகராட்சி பொறுப்பு ஆணையர் பாலமுருகன் மற்றும் காவல் ஆய்வாளர் ராஜபிரபு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை முடிவில், உயர் அதிகாரிகளிடம் கலந்து பேசி இரண்டு நாட்களில் அடுத்தகட்ட பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு ஏற்பட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

Related Link
காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை

காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சாலையோர கடைகளை அகற்றியதை எதிர்த்து போராட்டம்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved