news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

அம்மன் சொன்ன ‘Love You’ கோவில் திருவிழாவில் சர்ச்சை

இளைஞர்கள் வைக்கப்பட்ட பேனரால் பெரும்

1

By: Admin News Tamil

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
rani 1

வாலாஜாபேட்டையில் ஆடி மாதத்தை முன்னிட்டு அருள்மிகு ஶ்ரீ தேவி கருமாரி அம்மன் கோவில் திருவிழாவில் இளைஞர்கள் வைக்கப்பட்ட பேனரால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

இளைஞர்கள் வைக்கப்பட்ட பேனரால் பெரும் மாவட்டம் வாலாஜாபேட்டை அணைக்கட்டு ரோட்டில் சௌராஷ்ட்ரா சமூகத்தினர் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் திருக்கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு அப்பகுதி இளைஞர்கள் சார்பில் பேனர் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது அந்த பேனரில் அம்மனின் திருவுருவப்படத்துடன், அம்மன் கைகளால் ‘Love You’ எனக் குறிக்கும் இதய வடிவ சைகை காட்டுவது போன்றும், அதேபோல் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அம்மனை நோக்கி ஒற்றைக் கையால் சைகை காட்டுவது போன்றும் புகைப்படங்கள் எடிட் செய்யப்பட்டு இடம்பெற்றிருந்ததாக தெரிகிறது.

கடவுளாக பக்தர்களால் வணங்கப்படும் அம்மனின் திருவுருவத்தை இதுபோன்ற விதத்தில் எடிட் செய்து பேனரில் பயன்படுத்தியிருப்பது அப்பகுதியை சேர்ந்த மக்களிடையே பெரும் அதிருப்தியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது ஆடி மாத வழிபாட்டையொட்டி வைக்கப்பட்ட பேனரில் இடம்பெற்றுள்ள இந்த காட்சிகள் சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது பக்தி சார்ந்த நிகழ்வுகளில் தெய்வ உருவங்களை மரியாதையுடன் பயன்படுத்த வேண்டும் என்றும், சர்ச்சையை ஏற்படுத்தக்கூடிய வகையிலான படங்கள் மற்றும் வாசகங்களை தவிர்க்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காய்கறி வியாபாரம் செய்த நடிகர் விமல்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved