news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

விவசாய நிலங்களில் காட்டு யானைகள் அட்டகாசம்

கோவை

2

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
cbe

கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த புளியங்கண்டி அருகே விவசாயிகள் தென்னை மரம் அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். நேற்றிரவு இரவு ஆழியாறு வனப்பகுதியில் இருந்து வந்த யானைக் கூட்டம் விவசாயி புலி ராசு என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்துக்குள் புகுந்து 10 க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேருடன் பிடுங்கி சேதப்படுத்தி தென்னந் குருத்துகளை சாப்பிட்டு விட்டு அங்கிருந்த சென்றுள்ளது. காலை தென்னந்தோப்புக்கு வந்த விவசாயி யானையின் கழிவு மற்றும் கால் தடம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து தோப்பில் சுற்றி பார்த்த போது சுமார் 10 க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சேதப்படுத்தப்பட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்து வந்த வனத்துறையினர் சேதமடைந்தப் பகுதியை பார்வையிட்டனர். இது குறித்து விவசாயிகள் கூறும்போது, வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள், இரவு நேரத்தில் விவசாய தோட்டங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. மேலும் அப்பகுதியில் குடியிருந்து வரும் தோட்ட பணியாளர்கள் இரவு நேரங்களில் மிகவும் அச்சத்துடன் வசிக்கின்றனர். வனத்துறையினர் யானைக் கூட்டங்கள் விவசாய நிலங்களுக்குள் வராமல் தடுக்க வேண்டும். கடந்த 20 வருடமாக வளர்த்து வந்த தென்னை மரத்தை சேதப்படுத்திய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓணம் சீசனை முன்னிட்டு விலையேறிய நேந்திரன் வாழை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved