news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

3 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

ஈரோடு

2

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
erd  2

ஈரோடு மாநகரப் பகுதியில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 2 பேர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையிலும், ஒருவர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, டெங்கு வைரஸ் மேலும் பரவாமல் தடுக்கும் நோக்கில் ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் களத்தில் இறங்கி, பாதிக்கப்பட்ட நபர்களின் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சுற்றுவட்டாரங்களில் கொசு ஒழிப்பு மருந்தடித்தல், தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றுதல் மற்றும் தூய்மைப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் வீடுகளின் சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுமாறும், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் மாநகராட்சி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓணம் சீசனை முன்னிட்டு விலையேறிய நேந்திரன் வாழை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved