Also Watch
Read this
By: Fyrose Banu

ஆத்தூர் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் தூய்மை பணிக்கான உபகரணங்கள் வழங்கவில்லை சம்பள உயர்வு குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தி பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக நூற்றுக்கு மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு தூய்மை பணியில் ஈடுபடும் போது தேவையான கையுறை, கால் உரை, உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கவில்லை எனவும் அதே போல் PF மற்றும் ஊதிய உயர்வு குறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த த.வெ.க.,சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் மற்றும் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு ) ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். கடந்த மூன்று ஆண்டுகளாக ஒப்பந்த எடுத்த நிறுவனம் தங்களின் நியாயமான கோரிக்கைகளை கண்டு கொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டினர். அதேபோல் தூய்மை பணிக்கான உபகரணங்களையும் பேட்டரி வாகனம் உள்ளிட்டவைகளையும் பழுது ஏற்பட்டால் தங்கள் சொந்த செலவுகளிலேயே செய்ய வேண்டிய நிலை இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். ஒப்பந்த நிறுவனத்திடம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் அடிப்படையில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved