news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

"என்ன விலை" திரைப்படம் துருக்கி சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு

4 விருது

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
என்ன விலை

படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும்

நடிகை நிமிஷா சஜயன், நடிகர் கருணாஸ் நடித்துள்ள ‘என்ன விலை’ திரைப்படம் துருக்கி சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கலமாயா சினிவெர்ஸ், ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.

படத்தில் ஒய்.ஜி. மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், மோகன்ராம், லொள்ளு சபா சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணா, தீபா சங்கர், மொட்டை ராஜேந்திரன், நக்கலைட்ஸ் கவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 4 விருதுகளை வென்றுள்ள இந்த படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி மறைவு 

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி மறைவுக்கு நடிகை ஊர்வசி தனது உருக்கமான இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட ஆடியோ பதிவில், சவுகார் ஜானகியுடன் பல படங்களில் பணியாற்றி உள்ளதாவும், அவரது மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் கவலை தெரிவித்தார்.

மேலும், அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்திற்கு தனது இரங்கலை தெரிவித்து கொள்வதோடு, அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

நடிகை சௌகார் ஜானகி மறைவு வேதனையளிக்கிறது

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சௌகார் ஜானகி மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்ததாக தெரிவித்துள்ளார்.

அவர் நடித்த வெற்றிப்படங்களின் மூலம் தென்னிந்திய மக்களின் மனதில் என்றும் புகழோடு வாழ்வார் எனவும், அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், திரைத்துறையினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Link
அதிகமான படங்களில் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை

அதிகமான படங்களில் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்தியாவை நம்பிக்கைக்கான நாடாக பார்க்கும் உலக நாடுகள்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved