Also Watch
Read this
By: Fyrose Banu

கூடலூர் கோத்தர் வயல் கிராமத்தில் அதிகாலை நேரத்தில் உலா வந்த யானையால் மக்கள் அச்சம் அடைந்தனர் . யானை வந்த போது மக்கள் ஓட்டம் பிடித்து வீடுகளுக்குள்ளே தஞ்சமடைந்தனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமப் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது இதனால் மக்கள் நாள்தோறும் அச்சம் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் கூடலூர் அருகே கோத்தர்வயல் பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றித் திரியும் யானை வாழை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

இன்று அதிகாலை நேரத்தில் குடியிருப்புகள் அதிகமாக உள்ள பகுதியில் உலா வந்த யானையைக் கண்டு மக்கள் வீட்டு மாடிகளின் மீது ஏறி நின்று கொண்டனர். வாழைத்தோட்டத்தில் புகுந்த யானை பிரதான சாலைக்கு வந்தவுடன் வனத்துறையினர் யானையை விரட்டினர் அப்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் யானை வருவதை கண்டு ஓட்டம் பிடித்து வீடுகளுக்குள்ளே சென்று தஞ்சமடைந்தனர் அபாய ஒலி எழுப்பும் வாகனம் மூலம் வனத்துறையினர் யானையை விரட்டியடித்தனர் மேலும் யானை சாலையில் உலா வந்த போது அங்கிருந்த மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என கூச்சலிட்டு எச்சரிக்கை கொடுத்தனர். உடனடியாக வனத்துறையினர் ஊருக்குள் யானை நுழையாதவாறு நடவடிக்கை எடுத்து அடர்ந்த வனப்பகுதிக்குள் யானையை விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved