Also Watch
Read this
By: Fyrose Banu

சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தை நாமக்கல்லுக்கு மாற்றியதை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நுகர்வோர் நீதிமன்றத்தை நாமக்கல்லுக்கு மாற்றியதை கண்டித்து சேலம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் விவேகானந்தன் தலைமையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

தமிழகத்தில் உள்ள 14 நுகர்வோர் நீதிமன்றத்தை சுருக்கும் வகையில் சேலத்தில் செயல்பட்டு வந்த நுகர்வோர் நீதிமன்றத்தை நாமக்கல்லுக்கு மாற்றுவதால் சேலம் மாவட்டத்தில் செயல்படும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் நுகர்வோர் நீதிமன்ற வழக்குகள் தேக்கம் அடையும் சூழல் ஏற்படும் எனவும் தமிழக அரசு உடனடியாக நாமக்கல்லுக்கு நுகர்வோர் நீதிமன்றத்தை மாற்றப்படும் என்ற உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி 24 மற்றும் 25ஆம் தேதிகளில் சேலம் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபடுவார்கள் எனவும் அதனை தொடர்ந்து இன்று நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு தங்களின் எதிர்ப்பை தெரியப்படுத்தப்படும் எனவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved