Also Watch
Read this
By: Fyrose Banu

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காலேஜ் சாலையில் திண்டிவனம் அரசு பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது இந்தக் கல்லூரியில் நேற்று அமைச்சர் வன்னி அரசு மற்றும் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆகியோர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர் அப்பொழுது கல்லூரி விடுதி மாணவர்கள் உணவு சரியில்லை எனவும் விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லை எனவும் இது சம்பந்தமாக கல்லூரியின் முதல்வரிடம் கேட்டால் முறையான பதில் அளிக்காமல் தங்களை அவமானப்படுத்துவதாகவும் தாங்கள் கோரிக்கைக்கு கல்லூரி முதல்வர் முறையான பதில் அளிக்கவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை கல்லூரி விடுதி மாணவர்கள் அடுக்கடுக்காக வைத்தனர்.
இந்த நிலையில் அமைச்சர் வன்னியரசு ஆய்வு செய்து சென்ற பிறகு கல்லூரி விடுதியில் திடீரென பாத்ரூம் குழாயில் பாம்பு ஒன்று புகுந்தது இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது அதேபோல குடிதண்ணீர் இருக்கும் இடத்தில் தேரைகள் இருந்துள்ளது அதை அந்த மாணவர்கள் எடுத்து பல்வேறு குழுவில் பதிந்துள்ளனர் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து அங்கிருந்து சென்ற சிறிது நேரத்தில் பாம்பு தேரை இருந்தது மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved